இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா, 2 கார்களை பறிமுதல் செய்த  போலீஸார், இதுதொடர்பாக வழக்குரைஞர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
வேதாரண்யத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள், கார்களை ஆய்வு செய்த எஸ்.பி. ஜவகர்.
வேதாரண்யத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள், கார்களை ஆய்வு செய்த எஸ்.பி. ஜவகர்.


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா, 2 கார்களை பறிமுதல் செய்த  போலீஸார், இதுதொடர்பாக வழக்குரைஞர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

வேதாரண்யம் கடல் வழியாக புதன்கிழமை இரவு கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. நெய்விளக்கு பகுதியில் நடந்த வாகன சோதனையில் இலங்கைக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்ட  147 கிலோ கஞ்சா, அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது,

சம்பவத்தில் ஈடுபட்ட கோவில்பத்து வழக்குரைஞர் சரபோஜி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இன்று ஆய்வு செய்தார்.படம் :

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com