அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசு

அரசு ஊழியர்கள் 2 ஆவது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on
Updated on
1 min read


அரசு ஊழியர்கள் 2 ஆவது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் 2 ஆவது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி 2 ஆவது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

மேலும், தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர். 

எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494 ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937-இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் 2 ஆவது திருமணம் செய்தால், சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com