நாராயணத்தேவன் பட்டி ஊராட்சி கிராமசபை கூட்டம்: தலைவர் மீது மக்கள் சரமாரி புகார்
கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் நாராயணத்தேவன் பட்டி ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி மக்கள் கிராமசபை கூட்டத்தில் சரமாரியாக புகார் செய்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன் பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் பொன்னுத்தாய் செல்லையா தலைமை தாங்கினார், துணைத் தலைவர் டி.மகேந்திரன் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முத்தையா தலைவர் மற்றும் தலைவரின் கணவர் மீது சரமாரியாக புகார் கூறினார்.
ஊராட்சி நிர்வாகத்தில் கணவரின் தலையீடு இருப்பதாகவும் தலைவர் நேரடியாக திட்ட பணிகளை பார்வையிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனால் ஊராட்சி தலைவரின் கணவர் எழுந்து அவரிடம் நான் ஏன் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சித் தலைவரின் கணவர் தலையீடு இனியும் தொடர்ந்தால் மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் இருவரையும் சமாதானப் படுத்தினர், இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | வேலை கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கம் சைக்கிள் பேரணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.