வேலை கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கம் சைக்கிள் பேரணி

மத்திய, மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி கம்பத்தில் தொடங்கியது.
கம்பத்தில் மத்திய, மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரி நடைபெற்ற வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி.
கம்பத்தில் மத்திய, மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரி நடைபெற்ற வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி.

கம்பம்: மத்திய, மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி கம்பத்தில் தொடங்கியது.

தேனி மாவட்டம், கம்பம் காந்தி சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கோரி இரண்டு நாள் சைக்கிள் பேரணி தொடங்கியது.

முதல் நாள் சனிக்கிழமை பேரணியை மூத்த உறுப்பினர் டாக்டர் எஸ்.முருகன் தொடங்கி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.மோகன், எஸ்.பன்னீர்வேலு, ஐயப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

கம்பத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம்,  அய்யம்பட்டி, பல்லவராயன் பட்டி, மார்க்கையன்கோட்டை வழியாக சின்னமனூரை அடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி ஆண்டிப்பட்டியிலிருந்து புறப்பட்டு வைகை அணை, குள்ளபுரம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், வடுகபட்டி வழியாக பெரியகுளத்தை அடைகிறது.

ஏற்பாடுகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர். லெனின் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com