கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மின் விபத்து குறித்து வழக்குப் பதிந்து புலன் விசாரணை:  ஐ.ஜி. பேட்டி

மின் விபத்து குறித்து வழக்குப் பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய மண்டல காவல் தலைவர் வி. பாலகிருஷ்ணன் கூறினார்.

News image

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிடுகிறார் மத்திய மண்டல காவல் தலைவர் வி. பாலகிருஷ்ணன். உடன் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ. கயல்விழி உள்ளிட்டோர்.

Updated On :27 ஏப்ரல் 2022, 5:18 am

தஞ்சாவூர்: மின் விபத்து குறித்து வழக்குப் பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய மண்டல காவல் தலைவர் வி. பாலகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மண்டல காவல் தலைவர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். 

Story image

களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா தேர் திருவிழாவில் உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியதில் விபத்துக்குள்ளான தேர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா நடைபெற்றது. அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும். இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் நிகழ்விடத்திலும், 8 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப் பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும்.

குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று காவல் தலைவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.