‘தஞ்சையில் அதிமுக, பாஜக, திமுகவினர் இணைந்து செயல்பட்டனர்’: அன்பில் மகேஷ் உருக்கம்

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் மீட்புப் பணியின்போது அதிமுக, பாஜக, திமுக கட்சியினர் இணைந்து செயல்பட்டதாக பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் மீட்புப் பணியின்போது அதிமுக, பாஜக, திமுக கட்சியினர் இணைந்து செயல்பட்டதாக பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 3 மாணவர்கள் உள்பட  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதிக்கு நேற்று காலை சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் பேசியதாவது:

களிமேடு பகுதியில் நேற்று காலை 3 மணியளவில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், காலை 5 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

நேரடியாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் அங்கு சென்றோம். கடந்த 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல மாணவர்களுக்கு மெடல்கள், மாலைகள் சூட்டியிருக்கிறேன். ஆனால், அந்த பிணவறையில் நான் 8ஆம் வகுப்பு மாணவருக்கு மாலை வைத்தேன் என கண்கலங்கியபடி பேசினார்.

தொடர்ந்து, முதல்வரிடம் எல்லா உடல்களுக்கும் இங்கே மாலை அணிவித்து விடலாம் எனக் கூறினோம். ஆனால், அதை மறுத்த முதல்வர் அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக சென்று உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் எனக் கூறி அனைத்து வீடுகளுக்கும் நடந்தே சென்று நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

மருத்துவத் துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அனைவரும் உதவி செய்தார்கள்.

விபத்து நடந்த பகுதியில் ஊராட்சித் தலைவர் அதிமுகவை சார்ந்தவர், ஒன்றிய கவுன்சிலர் பாஜக சார்ந்தவர், மாவட்ட கவுன்சிலர் திமுக சார்ந்தவர், இவர்கள் மூன்று பேரும் இணைந்து பணியாற்றினார்கள்.

முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறும் நமது ஆட்சி என்பது களத்தில் பிரதிபலிக்கிறது. அதேபோல், பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com