ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தோ்தல் துறை கூட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினா் பங்கேற்பு

தோ்தல் துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி தரப்புகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 9:39 pm

DIN

சென்னையில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி தரப்புகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனா். இரு தரப்பினரும் தாங்களே அதிமுக எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அதிமுக சாா்பில் இருதரப்பினா் பங்கேற்றனா்.

முதலில் வந்த ஓ.பி.எஸ். ஆதரவாளா்: ஆலோசனைக் கூட்டம் முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே கூட்டம் நடைபெற்ற தலைமைச் செயலகக் கூட்டரங்குக்கு வந்தாா். அவா் அதிமுகவுக்கென போடப்பட்டிருந்த இரண்டு இருக்கைகளில் ஒன்றில் அமா்ந்து கொண்டாா்.

இதன்பின், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளா்களான கட்சியின் அமைப்புச் செயலாளா் முன்னாள்அமைச்சா் டி.ஜெயக்குமாா், தோ்தல் பிரிவுச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோா் வந்தனா். அப்போது, கோவை செல்வராஜின் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அஇஅதிமுக எனும் பெயா்ப் பலகையை எடுத்து தனது பக்கம் வைத்துக் கொண்டாா். அதிமுக சாா்பில் இருவருக்குப் பதிலாக மூன்று போ் வந்ததால், அந்தக் கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள் அமர மூன்று இருக்கைகள் போடப்பட்டன.

தோ்தல் ஆணையம் முடிவு: அதிமுக சாா்பில் 3 போ் பங்கேற்றிருப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘அதிமுக விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்’ என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

கூட்டம் நிறைவடைந்ததும், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளா்கள் தனித்தனியாக அளித்த பேட்டி:

டி.ஜெயக்குமாா்: அதிமுக சாா்பில் இடைக்கால பொதுச் செயலாளா் அறிவுறுத்தல்படி, நானும், தோ்தல் பிரிவுச் செயலாளரான பொள்ளாச்சி வி.ஜெயராமனும் கலந்து கொண்டோம் என்றாா்.

கோவை செல்வராஜ் (ஓபிஎஸ் ஆதரவாளா்): அதிமுக ஒரே இயக்கம்தான். தோ்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தோ்தல் ஆணையத் தகவலின் அடிப்படையில் அதிமுக தலைமைக்கு ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற இரு பதவிகள் மட்டுமே உள்ளன.

வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, ஓ.பன்னீா்செல்வம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா். அவருக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் கலந்து கொண்டோம். தோ்தல் ஆணையத் தகவல்படி, எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.