முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கின் இன்று(ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வருகிறது.
நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்களை வாங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பிறகு இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.
தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் ஆர்.எஸ். பாரதி அவகாசம் கோரியதை தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


