நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

நீலகிரி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைக் காட்டிலும் 91 சதவீதம் கூடுதலாக பெய்து இருந்தது. இதையடுத்து கடந்த சில நாள்களாக மழை குறைந்து இருந்தது.

இதற்கிடையே நீலகிரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் அதி கன மழை (ஆரஞ்சு அலொ்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உதகை, மஞ்சூா், குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

அதி கன மழை எச்சரிக்கையின் காரணமாக மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை சமாளிக்க அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்பு படையினா் 44 போ் செவ்வாய்க்கிழமை காலை உதகைக்கு வந்தனா். உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது வருகையை பதிவு செய்த பின்னா் உதவி ஆய்வாளா் சஞ்சீவ் தேஷ்வால் தலைமையில் கூடலூா் பகுதிக்கு 22 பேரும், உதவி ஆய்வாளா் பிரதீப் குமாா் தலைமையில் குந்தா பகுதிக்கு 22 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதற்கிடையே உதகை பகுதியில் மழை பாதிப்பு ஏற்பட்டால் சமாளிப்பதற்காக மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீசன் உத்தரவின் பேரில் உதகை தீயணைப்பு நிலைய அலுவலா் பிரேமானந்தன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் ரப்பா் படகுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

கனமழை காரணமாக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு நீலகிரியிலிருந்து, கேரளா செல்லும் வழிக்கடவு - நாடுகாணி நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

அத்துடன் தாலுகா வாரியாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்த பயிற்சி பெற்ற முதல் நிலை மீட்பு பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com