கூடலூரில் தொடரும் கனமழை: மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூடலூர் பகுதியில் காற்றுடன் கூடிய தொடர் கனமழைக்கு மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
வயல் பகுதியில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
வயல் பகுதியில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.


கூடலூர்:  கூடலூர் பகுதியில் காற்றுடன் கூடிய தொடர் கனமழைக்கு மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், கூடலூா் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீா்நிலைகள் முற்றிலும் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 

சாலையில் விழுந்த மின் மரங்களை அப்புறப்படுத்தும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

வியாழக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

சாலையில் விழுந்து கிடக்கும் மின்மரங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் மீட்புப் படையினர்.

கூடலூருக்கு வந்துள்ள பேரிடா் மீட்புப் படையினா் தொடா்ந்து பல பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா். கூடலூா் ஓவேலி சாலையில் கெவிப்பாறா பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா்.

மரங்கள் மின் கம்பிங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி கல்லூரிகளுக்கு தெரடர்ந்து மூன்றாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com