எடப்பாடி: எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே தனது இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குழந்தைகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பாலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சபரி. பஞ்சு மில் தொழிலாளியான இவரது மனைவி சரளா (28), இந்த தம்பதிகளுக்கு சர்வேஷ் (7) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கர்ப்பிணியாக இருந்த சரளா கடந்த மாதம் பேறுகாலத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
சரளாவிற்கு கடந்த 30 நாட்களுக்கு முன், பேறு காலத்திற்கு முன்னதாகவே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகளும் குறைவான எடையுடன் ஆரோக்கியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சரளா தனது குடும்ப உறவினர்களிடம் குழந்தைகளின் நிலையை பார்க்கும்போது இறந்துவிடலாம் போல் உள்ளதாக வேதனையுடன் கூறிவந்துள்ளார்.
இதனை அடுத்து சரளாவின் கணவர் சபரி நேற்று (வெள்ளி) இரவு தனது மாமனார் வீட்டுக்கு வந்து சரளாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் அங்கிருந்து சென்ற பின்னர் அதிகாலை நேரத்தில் சரளா தனது குழந்தைகளுடன் படுக்கையில் இல்லாததை அறிந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
அப்போது சரளா அருகில் உள்ள வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டனர். அவரை உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்த கிணற்றுப் பகுதியில் எடப்பாடி பகுதியில் இருந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சரளாவின் குழந்தைகளை த் தேடி வருகின்றனர். இரு பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
ஒன்ஸ் மோர் வெளியீடு எப்போது?
உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

ராகுல் டிராவிட், மிதாலி ராஜ், ரோஜர் பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

