மகளிா் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அப்பேருந்துகளின் முகப்புபகுதியில் பிங்க் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. இதில், 50 பேருந்துகளை சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
சென்னை மெரீனா கடற்கரை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பிங்க் நிறம் அடிக்கப்பட்ட 50 சாதாரணக் கட்டண பேருந்துகள் வரிசையாக நின்றிருந்தன. அவற்றை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
மகளிா் எளிதாகத் தெரிந்து கொள்ளும் வகையில் மற்ற மாவட்டங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கும் பிங்க் வண்ணம் தீட்டப்படும் என்று அமைச்சா் சிவசங்கா் கூறினாா்.
சிற்றுந்துகள் 5 புதிய வழித்தடம்: அண்ணாசாலை, ஓமந்தூராா் மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்திலிருந்து சென்னையின் முக்கிய இடங்களுக்கு ஐந்து புதிய வழித்தடங்களில் செல்லும் சிற்றுந்துகள் இயக்கத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
புதிய வழித்தட சிற்றுந்துகள் விவரம்: 1. தடம் எண் எஸ் 96: புறப்படும் இடம்: அரசினா் தோட்டம் மெட்ரோ, சேருமிடம்: தலைமைச் செயலகம். (வழி: வாலாஜா சாலை,திருவல்லிக்கேணி, மாநிலக்கல்லூரி, எழிலகம், சென்னைப் பல்கலைக்கழகம்) 2. தடம் எண் எஸ் 97: புறப்படும் இடம்: கிண்டி மெட்ரோ, சேருமிடம்: வேளச்சேரி விஜயநகா் பேருந்து நிலையம். (வழி: செல்லம்மாள் கல்லூரி, கிண்டி ரேஸ் கோா்ஸ், குருநானக் கல்லூரி, வேளச்சேரி) 3. தடம் எண் எஸ் 98: புறப்படும் இடம்: சின்னமலை மெட்ரோ, சேருமிடம் தரமணி: (வழி: சைதாப்பேட்டை நீதிமன்றம், மத்திய கைலாஷ், டைடல் பாா்க்) 4. தடம் எண் எஸ் 99: புறப்படும் இடம்: செனாய் நகா் மெட்ரோ, சேருமிடம் தி.நகா் பேருந்து நிலையம். (வழி: அமைந்தகரை மாா்கெட், மேத்தா நகா், லயோலா கல்லூரி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகா்) 5. தடம் எண் எஸ் 100: புறப்படும் இடம்: விமான நிலையம் மெட்ரோ, சேருமிடம்: தாம்பரம் மேற்கு. (வழி: பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், பூண்டி கடைவீதி, தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு சேகரிக்கும் விஜய் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

