
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் நடிககை மீரா மிதுனுக்கு 2ஆவது முறையாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட நடிகை மீரா மிதுன் சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாகப் பேசி கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு விடியோவை பதிவிட்டாா். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில், சைபா் குற்றப்பிரிவினா் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து மீரா மிதுனை கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி கைது செய்தனா். உடந்தையாக இருந்த அம்பத்தூரைச் சோ்ந்த அவரது நண்பா் அபிஷேக்கை ஆகஸ்ட் 15-ஆம் தேதி கைது செய்தனா். பின்னர் இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையும் படிக்க- திருவள்ளூர் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
இவ்வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிககை மீரா மிதுனுக்கு எதிராக 2ஆவது முறையாக பிடியாணை பிறப்பித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆக.29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.