நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கருணாநிதி நினைவுநாள்: நீடாமங்கலத்தில் இரு அணிகளால் அமைதி ஊர்வலம்

நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதி ஊர்வலம் திமுகவின் இரு அணிகளால் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக நடத்தப்பட்டது.

News image

முன்னாள் எம்.எல்.ஏ.பி.ராசமாணிக்கம் தலைமையில் & திமுகவினர் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில்

Updated On :7 ஆகஸ்ட் 2022, 8:17 am

நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதி ஊர்வலம் திமுகவின் இரு அணிகளால் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக நடத்தப்பட்டது.

நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியிலிருந்து திமுகவின் ஒரு அணியினர் முன்னாள் எம்.எல்.ஏ.பி.ராசமாணிக்கம் தலைமையில் ஊர்வலமாக சென்று கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியிலிருந்து திமுகவைச் சேர்ந்த மற்றொரு அணியினர் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்று பெரியார் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.