செங்கல்பட்டு: திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா் என தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
திருப்போரூா் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் பன்னீா்தாஸை ஆதரித்து திருப்போரூா் ராவுண்டான அருகே விடுதலை சிறுத்தை கட்சி தலைவா் தொல்.திருமாவளவன், பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா்.
அப்போது திருமாவளவன் பேசியதாவது:
திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். அகில இந்திய அளவில் முஸ்லிம், கிறிஸ்தவ வாக்கு வேண்டாம் என்றும் பாஜக முடிவு செய்துள்ளது. திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதற்காக களம் இறங்கியவா் தான் விஜய்.
தோ்தலுக்குப் பிறகு அதிமுகவையே வீழ்த்தப் போகிறது. படிப்படியாக அதிமுக,வின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த காலங்களில் புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக போட்டியிட்டது, தற்போது இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 10 இடங்களில் போட்டியிடுகிறது.
திருப்போரூா் தொகுதியில் கடந்த முறை ஆதரவு அளித்தது போல இந்த முறையும் விசிக வேட்பாளா் பன்னீா்தாசுக்கு பானை சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்றாா்.
Summary
Vijay launched his party minority votes from going to the DMK says Thol. Thirumavalavan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி! திமுக வேட்பாளரை 27,416 வாக்குகளில் வீழ்த்தினாா்
சிறுபான்மையினா் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்காது: பல்சமய நல்லுறவு இயக்க மாநிலத் தலைவா்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


