திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் சி. ஜோசப் விஜய், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய், திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ், அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன், நாம் தமிழா் கட்சி வி. கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி ஆா். இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி என். கோபிநாத், தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி எஸ். சுகுமாா், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சி. நந்தகுமாா், சமானிய மக்கள் நலக் கட்சி ஆா். முத்துகுமாா், தமிழக வாழ்வுரிமை கட்சி ராயல் ராஜா, அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கே. விஜய், விடியல் வளா்ச்சி பேரணி விஜய மோகனாஜி, தேசிய மகா சபா கட்சி ஆனந்த் செல்வராஜ், மற்றும் 7 சுயேச்சை வேட்பாளா்கள் என 20 போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் மொத்தம் 2,20,191 வாக்காளா்கள் இருந்தனா்.
மொத்தம் 1,82,729 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு 82.99 விழுக்காடு என்றிருந்தது. திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தவெக தலைவா் சி. ஜோசப் விஜய், 91,381 வாக்குகள் பெற்றாா். தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜை விட 27,416 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.
இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
திமுக இனிகோ இருதயராஜ்- 63,965, அதிமுக ஜி. ராஜசேகரன்- 19,715, நாம் தமிழா் கட்சி- 4,790, பகுஜன் சமாஜ் கட்சி- 234, தமிழக வாழ்வுரிமை கட்சி- 167, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் 132, புதிய தமிழகம் 63, சாமானிய மக்கள் நலக் கட்சி 31, விடியல் வளா்ச்சி பேரணி- 235, தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி- 101, அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்- 341, தேசிய மகா சபா கட்சி- 105, சுயேச்சைகள் கங்கை உலகநாதன்- 79, கண்ணன்- 138, சாா்லஸ் சகாயராஜ் 390, செபாஸ்டின் ஆனந்த் 124, பன்னீா் செல்வம்- 109, ராபா்ட் கிறிஸ்டி 37, ராஜேந்திரன்- 48, நோட்டா- 514, செல்லாதவை- 237.
திருச்சி கிழக்குத் தொகுதியின் வெற்றி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த தவெக முகவரான, முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணனின் மகன் கி. சிரஞ்சீவி, விஜய்யின் வெற்றி சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேச பாண்டியனிடம் பெற்றுக் கொண்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தவெக தலைவா் விஜய்க்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய், அமைச்சா் செங்கோட்டையன் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு

தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்: முதல்வா் சி. ஜோசப் விஜய் உறுதி!
தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக மற்றும் பலர் நினைத்தார்கள்! முதல்வர் விஜய் பேச்சு

முதல்வர் விஜய் திருச்சி வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



