தூத்துக்குடியில் திமுகவினர் அமைதி  ஊர்வலம்
தூத்துக்குடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

கருணாநிதி நினைவு நாள்: தூத்துக்குடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
Published on

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

புதிய பேருந்துநிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைச்சர் பெ. கீதாஜீவன் தலைமையில் புறப்பட்ட ஊர்வலம் கலைஞர் அரங்கம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து அங்குள்ள  கருணாநிதி சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அச்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநகர செயலர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com