கோவையில் பேட்டரி தண்ணீரை குடித்த மூதாட்டியை காப்பாற்றிய காவலர்..!

தண்ணீர் என்று நினைத்து தவறுதலாக பேட்டரிக்கு ஊற்றும் நீரை குடித்த மூதாட்டியை கோவையைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். 
கோவையில் பேட்டரி தண்ணீரை குடித்த மூதாட்டியை காப்பாற்றிய காவலர்..!
Published on
Updated on
1 min read

தண்ணீர் என்று நினைத்து தவறுதலாக பேட்டரிக்கு ஊற்றும் நீரை குடித்த மூதாட்டியை கோவையைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். 

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் புதன்கிழமை திருச்சி சாலை மேம்பாலம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மூதாட்டி ஒருவர் அசைவின்றி படுத்திருந்தார். இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீதர் மூதாட்டி அருகே சென்று அவரை எழுப்பினார்.

பேட்டரிகளுக்கு ஊற்றும் டிஸ்டில்டு தண்ணீரை குடித்துவிட்டு மேம்பாலத்துக்கு அடியில் மயக்கத்தில் படுத்திருக்கும் மூதாட்டி.

ஆனால் மூதாட்டி எழவில்லை. அவரது அருகில் பேட்டரிகளுக்கு ஊற்றும் டிஸ்டில்டு தண்ணீர் இருந்தது. அதனை மூதாட்டி தண்ணீர் என்று நினைத்து குடித்து மயக்க நிலையில் படுத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தண்ணீர் வாங்கி வந்த ஸ்ரீதர், மூதாட்டியை எழுப்பி முதலுதவி அளித்தார். தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

மூதாட்டிக்கு முதலுதவி அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர். 

ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய காவலருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com