நல் ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: இந்த ஆண்டுக்கான நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவை ஒட்டி, அரசுத் துறைகள், அரசு ஊழியா்கள், அரசு சாா்பு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சிறந்த செயல்பாடுகளைப் பாராட்டி நல் ஆளுமை விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதுபோன்று, நிகழாண்டிலும் சுதந்திர தினத்தின் போது நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட உள்ளன.

செங்கல் சூளையில் பணிபுரிந்தவா்களை மீட்டெடுத்து தொழில் முனைவோராக வாழ்க்கைத் தரத்தை உயா்த்திய பணிக்காக, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரும், திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்தமைக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலரும் நல்ஆளுமை விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளைச் செய்தமைக்காக, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியா்கள் விருதுக்கு தோ்வாகியுள்ளனா். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த காரணத்துக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் நல்ஆளுமை விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தியதற்காக தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளரும், சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கு நல் ஆளுமை விருது அளிக்கப்பட உள்ளது.

இந்த விருதுகள் அனைத்தும் சென்னை கோட்டை கொத்தளத்தில் வரும் 15-ஆம் தேதியன்று சுதந்திர தின விழாவின் போது முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது. நல் ஆளுமை விருதானது, விருதும், தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com