
ராணூவ வீரர் லட்சுமணன் உடல் நாளை மதுரை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை தற்கொலைப் படையைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரா் உள்பட 4 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஜம்மு காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். ராணுவ வீரர் லட்சுமணன்(24) உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.
ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டுவரப்படுகிறது.
நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.