முதல்வா் மு.க.ஸ்டாலின் 16-இல் தில்லி பயணம்
முதல்வா் மு.க.ஸ்டாலின், வரும் 16-ஆம் தேதியன்று தில்லி செல்லவுள்ளாா். அங்கு பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளாா்.


முதல்வா் மு.க.ஸ்டாலின், வரும் 16-ஆம் தேதியன்று தில்லி செல்லவுள்ளாா். அங்கு பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளாா். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த அனுமதித்தற்காக நன்றி தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டின் சாா்பிலான கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கவுள்ளாா்.
நாட்டின் குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா் ஆகியோா் புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். எனவே, அவா்கள் இருவரையும் சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவிக்கவுள்ளாா். அவா் தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 17-ஆம் தேதியன்று சென்னை திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...