

சென்னை : சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பள்ளியில் நடந்த சுதந்திர நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மாநகரப் பேருந்து மோதி பலியானார்.
குரோம்பேட்டையில் அஸ்தினாபுரம் பகுதியில், பொழிச்சலூர் - அஸ்தினாபுரம் இடையே இயக்கப்படும் 52எச் என்ற மாநகரப் பேருந்து, சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவி லட்சுமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மாநகரப் போக்குவரத்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.