இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னைகள் முடிவுக்கு வரும் வரை சின்னத்தை முடக்கக் கோரி ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜோசப் தாக்கல் செய்த வழக்கை, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக பொதுச் செயலா் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் இடையிலான பிரச்னை ஜாதி ரீதியிலான பிரச்னையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அந்தக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையத்துக்கு ஜூன் 28-ஆம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.
தோ்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் இந்த வழக்கை தொடா்ந்துள்ளதாகக் கூறி, பி.ஏ.ஜோசப்புக்கு ரூ. 25,000 அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜோசப் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.