சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
Published on
Updated on
1 min read


சென்னை:  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.

நல்ல சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 2.61 இலட்சம் கி.மீ ஆகும். இவற்றில், நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் சுமார் 70,556 கி.மீ நீளச் சாலைகள் உள்ளன. இச்சாலைகள் இந்திய தேசிய ஆணைய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மற்றும் மாவட்ட இதர சாலைகள் என பல்வேறு பிரிவுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க.. நூற்றுக்கணக்கான கடன் செயலிகளின் பின்னணியில் சீனம்: மிகப்பெரிய சதி கண்டுபிடிப்பு

இதுமட்டுமின்றி மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளால் பராமரிக்கப்படும் சாலைகளும் உள்ளன. சாலைக் கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சாலைக் குறியீடுகள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆகையால், சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், மக்கள் சாலைகளை சரியான வகையில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இக்கையேட்டில் வாகன வேகத்தின் தாக்கங்களும், உலக சுகாதார நிறுவனம், இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சாலை விபத்து தொடர்பான புள்ளி விவரங்கள், விபத்திற்கான காரணங்கள், தவிர்த்திடும் வழிமுறைகள், சாலை விதிகள், சாலைப் பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் தெரிவிக்கும் பலகைகள் ஆகிய விவரங்கள், இலகுரக, கனரக வாகனம் இயக்குபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றிய படவிளக்கம், வாகனப் பராமரிப்பு, முதலுதவி சேவைப் பற்றிய விளக்கங்கள் மற்றும் உதவி எண்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com