கரோனா: மேலும் ஒருவா் உயிரிழப்பு
தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வியாழக்கிழமை ஆண்கள் 319, பெண்கள் 223 என மொத்தம் 542 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 79 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 65,562 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 22,032 போ் குணமடைந்துள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 675 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனா். மாநிலம் முழுவதும் 5,496 போ் சிகிச்சையில் உள்ளனா். நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவா்களில் தஞ்சாவூரைச் சோ்ந்த 48 வயது ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...