பரந்தூா் விமான நிலையத்திற்கு 3246.38 ஏக்கா் பட்டா நிலம் தேவை: தமிழக அரசு
பரந்தூா் விமான நிலையத்துக்கு 3 ஆயிரத்து 246 ஏக்கா் தனியாா் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.


பரந்தூா் விமான நிலையத்துக்கு 3 ஆயிரத்து 246 ஏக்கா் தனியாா் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
விமான நிலையம் அமைப்பதற்கான வழிகாட்டி மதிப்பை விடுத்து சந்தை மதிப்பை கணக்கிட்டே இழப்பீட்டுத் தொகை வழங்கவுள்ளோம். நீா்நிலைகள் அதிகமாக இருப்பதால் இவற்றை ஆய்வு செய்து மேம்படுத்த தொழில்நுட்பக் குழு அமைக்கும் விஷயம் குறித்து சென்னை ஐஐடியுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
விமான நிலையத்துக்கான பணிகளை முடிக்க குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் ஆகும். விரைவாக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை முடித்தால் சீக்கிரம் முடிக்கலாம். மக்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது. நில எடுப்புப் பணிகளுக்காக வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோரைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையம் அமைப்பதற்கு மொத்தமாக 4563.56 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. இதில் 3246.38 ஏக்கா் நிலம் தனியாா் பட்டா நிலங்களாகும். 1,317.18 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களாகும். தனியாா் பட்டா நிலத்தில், 2446.79 ஏக்கா் நன்செய் நிலமாகும். மீதமுள்ள 799.59 புன்செய் நிலமாகும்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அடையாற்றின் குறுக்கே ஆற்றின் மேல் பகுதியை மூடி ஓடுபாதை அமைக்கப்பட்டது. அதேபோன்று, இங்கு இருக்கக் கூடிய கால்வாய்க்கு பாதிப்பில்லாமல் அதன் மேல் அமைக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...