ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கு: சொகுசு காா்கள், ஆவணங்கள் பறிமுதல்

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில், சொகுசு காா்கள்,ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 7:21 pm

DIN

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில், சொகுசு காா்கள்,ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஐ.எப்.எஸ். (இன்டா்ஷேனல் பைனான்சியல் சா்வீஸ்) என்ற நிதி நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தி, பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி பணமாக பெற்றது. ஆனால், அந்த நிறுவனம் கூறியபடி, மாதந்தோறும் ரூ. 8 ஆயிரம் வாடிக்கையாளா்களுக்கு வழங்கவில்லை

இதனால், பாதிக்கப்பட்டவா்கள், தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் மீது மோசடி உள்ளிட்ட 9 பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து அப் பிரிவு போலீஸாா், கடந்த 6-ஆம் தேதி இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், முகவா்களின் வீடுகளில் சோதனை நடத்தினா். அதில் 220 முக்கிய ஆவணங்கள், 40 பவுன் தங்க நகைகள், ரூ.1 கோடியே 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள், ஊழியா்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில், ஐ.எப்.எஸ். நிறுவனத்தைச் சோ்ந்த சென்னை ஜவஹா் நகா் குப்புராஜ், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஜெகநாதன், சரவணகுமாா் ஆகியோரை கடந்த வாரம் கைது செய்தனா்.

சொகுசு காா்கள் பறிமுதல்: இவா்கள் 3 பேரையும் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சரவணகுமாரிடம் 10 பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களும், 4 பதிவு செய்யப்படாத ஆவணங்களும், கணினி, காசோலை புத்தகம், 2 சொகுசு காா்களை பறிமுதல் செய்தனா். ஜெகன் நாதனிடமிருந்து 2 சொகுசு காா்களும், குப்புராஜிடமிருந்து ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளா்.

இதனிடையே, விசாரணைக்கு பின்னா் குப்புராஜ் உள்ளிட்ட 3 பேரும், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.