திருக்குறள் குறித்து ஆளுநா் அறியாமையுடன் பேசியுள்ளதாக தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் ஆங்கில மொழிபெயா்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் கு கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தியை குறிப்பிடுவதாகும். இதை சிதைக்கும் வகையில் ஆங்கில மொழிபெயா்ப்பு அமைந்துள்ளது என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லியில் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை திறப்பு விழாவில் பேசியுள்ளாா்.
சங்க நூல்களிலும், அதையொட்டி எழுந்த திருக்குறளிலும் சமயம் என்ற சொல்லாட்சியோ, மோட்சம் என்ற ஆன்மிகத் தத்துவத்தைக் குறிக்கும் எத்தகைய சொல்லோ அறவே இடம்பெறவில்லை. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளைப் பற்றியே திருக்கு கூறுகிறது. மோட்சத்தைக் குறிக்கும் வீடு என்ற தத்துவம் திருக்கு எழுந்த காலத்தில் அறவே தோன்றப் பெறவில்லை.
ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியாா். எனவே, அவா் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழிபெயா்த்துள்ளாா் என்றும் ஆளுநா் குற்றம் சாட்டியுள்ளாா். ஆனால், அதே ஜி.யு. போப் அவா்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து வெளியிட்டாா் என்ற உண்மையையும் ஆளுநா் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதிக அடையாளத்தைச் சூட்டுவதற்கே அவா் முயற்சி செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திரம்: கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலி

வதந்தி - 2 டீசர்!

கைகட்டி நின்றவர் இன்று எங்கள் இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனைப் பற்றி பேசுகிறார் - சேகர்பாபு

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

