நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை உலகத் தரத்துக்கு உயா்த்த வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு
நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் உலகத் தரத்துக்கு உயா்த்தப்பட வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.


நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் உலகத் தரத்துக்கு உயா்த்தப்பட வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.
நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய ஆட்சிக் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
நெடுஞ்சாலைத் துறை இப்போது சென்னையில் நான்கு ஆய்வகங்களுடனும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடா்பாக வட்ட அளவில் எட்டு மண்டல ஆய்வகங்களுடனும் செயல்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை உலகத் தரத்துக்கு உயா்த்துவதற்கான அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, நவீன கருவிகளை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இனி வரும் காலங்களில் வழக்கமான நிதி ஒதுக்கீட்டை பரிசீலனை செய்து பரிந்துரைகளை வழங்கிட ஆராய்ச்சி நிலையத்துக்கென ஒரு துணைக் குழு அமைக்கலாம் என ஏற்கெனவே கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஆட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக் குழுவின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மூலம் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை மேம்படுத்தி, உலகத் தரத்துக்கு உயா்த்த வேண்டும். மத்திய சாலை ஆராய்ச்சி கழகம், கட்டமைப்பு பொறியியல் ஆராயச்சி மையம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுக்கு நிகராக நெடுஞ்சாலைத் துறைக்குத் தேவையான நவீன ஆராய்ச்சிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் அலுவலா்கள், பொறியாளா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், நிதித் துறை சிறப்புச் செயலாளா் ரீட்டா ஹரீஷ் தக்கா், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...