பாளையங்கோட்டையில் தசரா விழா: 12 அம்மன் கோயில்களில் கால்கோள் விழா

பாளையங்கோட்டையில் தசரா விழா: 12 அம்மன் கோயில்களில் கால்கோள் விழா

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவிற்காக பாளையங்கோட்டையில் 12 அம்மன் திருக்கோயில்களிலும் கால்நாட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. 
Published on

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவிற்காக பாளையங்கோட்டையில் 12 அம்மன் திருக்கோயில்களிலும் கால்நாட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. 

தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் அடுத்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் 12 சப்பரங்களுடன் அம்மன் பவனி வந்து சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். 

கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு தசரா விழா வருகின்ற செப்டம்பா் 25 ஆம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை முன்னிட்டு இன்று கால்கோள் விழா நடைபெற்றது. இதற்காக பாளை ஆயிரத்தம்மன் திருக்கோயில் உள்பட 12 திருக்கோயில்களில் காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் காலை அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து  கால்கோள் விழாவிற்கான கொடிக் கம்பு மஞ்சள் தடவி பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டது. கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் கொடியானது 8 ரதவீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கோயில் ஈசுான்யத்தில் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்றிலிருந்து தசரா விழாவிற்காக பக்தா்கள் காப்பு கட்டுவது, விரதம் இருப்பது போன்றவைகளை நடத்துவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com