ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக ஆளுநருடன் சட்ட அமைச்சா் சந்திப்பு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, ஆளுநா் ஆா்.என். ரவியை, சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி, சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
ஆளுநர் ஆர்.என்.ரவி
Updated On :1 டிசம்பர் 2022, 5:20 am

DIN

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, ஆளுநா் ஆா்.என். ரவியை, சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி, சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது தொடா்பான சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆன்லைன் சூதாட்டம் தொடா்பாகக் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் காலாவதியானது.

இதனால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன் கலந்தாலோசிக்க தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதி நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தாா். அந்த வகையில் ஆளுநரை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.