ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு 1,000 கன அடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர்திறப்பு 100 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. 

News image
Updated On :12 டிசம்பர் 2022, 3:10 am

DIN


பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர்திறப்பு 100 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. 

திருவள்ளூா் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாக விளக்கும் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டம் கணிசமாகவும் உயா்ந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடி. ஏரியின் தற்போதைய நீா்மட்டம் 22.25 அடியாகவும், நீா்வரத்து வினாடிக்கு 2,046 கன அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 3,184 மில்லியன் கன அடி நிரம்பியுள்ளது.

இதையடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உபரிநீர் திறப்பு 1,000 கன அடியாக அதிகரிக்கப்படுவதால்,  உபரி நீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.