தொடர் மழையிலும் சுடர்விட்டு எரியும் திருவண்ணாமலை மகா தீபம்!

தொடர் மழையிலும் 7வது நாளாக திருவண்ணாமலை மகா தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.
தொடர் மழையிலும் சுடர்விட்டு எரியும் திருவண்ணாமலை மகா தீபம்!

தொடர் மழையிலும் 7வது நாளாக திருவண்ணாமலை மகா தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.

அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பா் 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

இந்த தீபம் தொடா்ந்து 11 நாள்களுக்கு அணையாமல் எரிவது வழக்கம். புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் கூட மகா தீபம் பிரகாசமாக எரியும்.

மாண்டஸ் புயலின் தாக்கம்: டிச. 9, 10 ஆகிய தேதிகளில் மாண்டஸ் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் குளிர் காற்று, மழை, இடி, மின்னல் போன்ற பாதிப்புகள் இருந்தன.

இந்த இயற்கைச் சீற்றத்தில் கூட 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் அணையாமல் பிரகாசமாக எரிந்தது வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து மழையிலும் திருவண்ணாமலை மகா தீபம் எரிந்து கொண்டு வருகிறது. இந்த மகா தீபம் 11 நாள்கள் மலை உச்சியில் காட்சி அளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com