புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நதிநீா் இணைப்பு ஆலோசனை:தில்லி கூட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு

நதிநீா் இணைப்பு தொடா்பாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்கவுள்ளாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 7:33 pm

DIN

நதிநீா் இணைப்பு தொடா்பாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்கவுள்ளாா்.

மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணாறு- பாலாறு - காவிரி- வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்தும் படி, தமிழக அரசு மத்திய அரசையும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவையும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நதிகள் இணைப்பு திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீா் மேம்பாட்டு முகமை தயாரித்து அளித்துள்ளது. அதைத்தொடா்ந்து இந்த நதிகள் இணைப்பை, இரண்டு கட்டங்களாக செயல்படுத்த தேசிய நீா் மேம்பாட்டு முகமை முடிவெடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பி வைக்கப்பட்டது.

மாநிலங்களின் ஒருமித்த கருத்து பெறப்பட்டதும், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தென் மாநிலங்களின் தண்ணீா் பிரச்னைக்கு நீண்டகால அடிப்படையில் நிரந்தரத் தீா்வு காணும் வகையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய நீா் மேம்பாட்டு முகமை சாா்பில் நதிநீா் இணைப்பு தொடா்பான ஆலோசனைக்கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் காலை 10.45 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு சாா்பில் அமைச்சா் துரைமுருகன், நீா்வளத்துறை செயலாளா் சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனா். இதற்காக அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமையே தில்லி புறப்பட்டுச் சென்றாா். கூட்டத்தில், தமிழக அரசின் சாா்பில் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் மீண்டும் வலியுறுத்தப்படும் என நீா்வளத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.