மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிச. 31 வரை அவகாசம்: செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிச. 31 வரை அவகாசம்: செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 

தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி, விசைத்தறி தொழிளாா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 

இந்த மானியங்களைப் பெற ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, 'தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி ஒரு கோடியே 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக இணைத்துள்ளனர். 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வருகிற 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். 

வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அன்றைய தினம் சிறப்பு முகாம்கள் எதுவும் இருக்காது. சென்னையில் தேவைக்கேற்ப சிறப்பு முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com