
பாரத ஸ்டேட் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகித உயர்வு இன்று(டிச. 15) முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி எம்சிஎல்ஆர் எனும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி கடந்த மாதம் அறிவித்தது.
இதன்படி தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது.
இதனால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 8.55% ஆக இருந்த நிலையில் 0.35% அதிகரித்து 8.90% ஆக உள்ளது. அதேநேரத்தில் வருகிற டிசம்பர் 15 முதல் 2023 ஜனவரி 31 வரை விழாக்கால சலுகையாக 0.15 முதல் 0.30% வரை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாதம் மற்றும் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 8.05% லிருந்து 8.30% ஆக அதிகரித்துள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முறையே 8.50%, 8.60% ஆக அதிகரித்துள்ளது.
மேலும் எஸ்பிஐ ரெப்போவுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம்(RLLR) 8.15% லிருந்து 8.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிகாரில் கள்ளச்சாராய பலி 39 ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.