'25 ஆண்டுகளில் இல்லாத கூகுள் தேடல்' - சுந்தர் பிச்சை ட்வீட்!

'25 ஆண்டுகளில் இல்லாத கூகுள் தேடல்' - சுந்தர் பிச்சை ட்வீட்!

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றைய பிஃபா உலகக்கோப்பை போட்டியின்போது கூகுளில் அதிகம் பேர் தேடியதாக நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 
Published on

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றைய பிஃபா உலகக்கோப்பை போட்டியின்போது கூகுளில் அதிகம் பேர் தேடியதாக நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. அதன்பிறகு பெனால்டி பகுதியில் 4-2 என ஆர்ஜென்டீனா வென்று கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மேலும், இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பிரான்ஸ் தோற்றதும் மைதானத்திலே எம்பாப்பே அழுததும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆறுதல் கூறியதும் இணையத்தில் வைரலாகின. 

இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, 'கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றைய போட்டியின்போது பிஃபா உலகக்கோப்பை குறித்து அதிகம் பேர் தேடியுள்ளனர். கூகுள் ட்ராபிக் நேற்று சாதனை படைத்துள்ளது. உலகத்தில் உள்ள அனைவரும் ஒன்றைப் பற்றி தேடுவது போல இருந்தது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com