சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு! ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா: ஹைலைட்ஸ் விடியோ

இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

Updated On :

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

மிகச்சிறந்த கால்பந்து ஆட்டம் என ரசிகர்களாலும் நிபுணர்களாலும் பாராட்டைப் பெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோலை 23-வது நிமிடத்தில் பெனால்டி வழியாக அடித்தார் மெஸ்ஸி. பிறகு 36-வது நிமிடத்தில் டி மரியா ஒரு கோல் அடித்து 2-0 என்கிற முன்னிலையை ஏற்படுத்தினார். பொறி பறந்த 2-வது பாதியில் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து அசத்தினார் பிரான்ஸின் எம்பாப்பே. 90 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் 108-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, 118-வது நிமிடத்தில் எம்பாப்பே இன்னொரு கோல் அடித்து 3-3 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பிறகு இரு அணிகளாலும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆட்டம் பெனால்டி பகுதிக்குச் சென்றது. இதில் 4-2 என ஆர்ஜென்டீனா வென்று கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.