தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

வானிலை! சென்னை, புறநகருக்கு இரவு 7 வரை கனமழை எச்சரிக்கை! (நவ. 2)

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்யும் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு...

rain

கனமழை - கோப்புப்படம்

Updated On :

சென்னை மற்றும் புறநகரில் இன்றிரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், தீவிரப் புயலாக இன்று காலை வலுப்பெற்று, நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 170 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த புயல் இன்று மாலை சென்னை கடற்கரையை நெருங்கி, பின்னர் ஆந்திரத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த மூன்று மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Summary

Weather Forecast - Heavy rain warning for Chennai and its suburbs until 7 PM (Nov. 2)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.