ஓடிடியில் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி எப்போது?
ரணபலி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி வெளியீடு தொடர்பாக...

ரணபலி படத்தின் காட்சி - படம்: விடியோ கிளிப்
விஜய் தேவரகொண்டாவின் ரணபலி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த ரணபலி திரைப்படம் கடந்த அக். 16 ஆம் தேதி வெளியானது.
இந்தப் படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்று, ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நாயகியாக ரஷ்மிகா நடித்துள்ளார்.
1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர். அஜய்-அதுல் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ரணபலி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவ. 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information regarding the OTT release of Vijay Deverakonda's film 'Ranabali' has emerged.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


