விஜய் தேவரகொண்டாவுக்கு கைகொடுக்காத ரணபலி!
ரணபலி திரைப்பட வசூல் குறித்து...

நடிகர் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ரணபலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தோல்விப்படங்களே அமைந்துள்ளன. சில வெற்றிபெற்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்ததால் பெரிய விமர்சனங்களைச் சந்திக்கவில்லை.
லைகர், குஷி, பேமிலி ஸ்டார், கிங்டம் ஆகிய திரைப்படத் தோல்விகளால் விஜய் தேவரகொண்டா துவண்டிருந்தார். தொடர்ந்து, இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ரணபலி வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்கிற பேச்சு இருந்தது.
ஆனால், கதையாக நன்றாக இருந்தாலும் இப்படத்தின் சுவாரஸ்யமற்ற மேக்கிங்கால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், வணிகத்திலும் சரிவைச் சந்தித்து வருகிறது. முதல் நாளில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாள்களில் குறைவான விஷயங்களைச் செய்து தற்போது வரை ரூ. 22 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வணிக ரீதியாக இப்படம் பின்னடவைச் சந்தித்துள்ளதாகவே தெரிகிறது.
Actor Vijay Deverakonda's film Ranabali has received mixed reviews.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


