கடவுளால்... பாடகர் மகாலிங்கத்தைப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா!
பாடகர் மகாலிங்கம் பாடியதைக் கண்டு ஆச்சரியப்பட்ட விஜய் தேவரகொண்டா....

பாடகர் மகாலிங்கம் நடிகர் விஜய் தேவரகொண்டா.
நடிகர் விஜய் தேவரகொண்டா பாடகர் மகாலிங்கத்தைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ரணபலி என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நாயகியாக ரஷ்மிகா நடித்துள்ளார்.
1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் அக். 16 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் பாடகர் மகாலிங்கம் கலந்துகொண்டு ரணபலி திரைப்படத்தில் தான் பாடிய நாட்டுப்புற பாடலான, ‘ராயல் ஏலினா’ பாடலைப் பாடினார். இதனை நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் ஆச்சரியப்படும்படி கேட்டனர்.
பின், இப்பாடல் குறித்து விஜய் தேவரகொண்டா தன் எக்ஸ் தளத்தில், “சிலர் கடவுள்களால் ஆசிர்வதிக்கபட்டவர்கள். பாடகர் மகாலிங்கம் நாட்டுப்புற கதை சொல்லல் முறையில் பாடிய போது அதன் தாக்கத்தை உணர்ந்தேன். இதை நேரில் கண்டதைப் பெருமையாகவும் நினைகிறேன்.” என அவரைப் பாராட்டியுள்ளார்.
Actor Vijay Deverakonda has praised singer Mahalingam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


