ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

டோரதி அங்கீகாரத்தைப் பெற்று தந்துள்ளது: நடிகை ஜீவா சுப்பிரமணியம்

டோரதியால் கிடைத்த அங்கீகாரம் குறித்து ஜீவா சுப்பிரமணியம்...

ஜீவா சுப்பிரமணியம். - x

Updated On :

டோரதி திரைப்படம் தான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தைப் பெற்று தந்துள்ளதாக நடிகை ஜீவா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவா சுப்பிரமணியம் , இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய, ‘டோரதி’ திரைப்படத்தில் தனது நடிப்புக்குக் கிடைத்துவரும் பாராட்டுகளால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஒரு கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்பதைத் தாண்டி, தனது பணியை மக்கள் கவனித்துப் பாராட்டுவதுடன் கொண்டாடவும் செய்கிறார்கள் என்ற உணர்வையும் நீண்ட காலம் அவர் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் இந்தப் படம் அவருக்கு கொடுத்துள்ளது.

இதுபற்றி ஜீவா சுப்பிரமணியம் பகிர்ந்த போது, “எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அது இப்போது நடந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

Story image

கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் எங்கு சென்றாலும் என்னைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். என்னை ‘ஜீவா அக்கா’ என்று அன்போடு அழைக்கிறார்கள். அந்த அன்பும் ரசிகர்களின் ஆதரவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மகிழ்ச்சி, இன்னும் பத்து ஆண்டுகள் நான் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலைக் கொடுத்துள்ளது” என்றார்.

இதுவரை சுமார் 45 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் ஜீவா நடித்துள்ளார். ‘ஆக்கம்’, ‘தாரை தப்பட்டை’, ‘தர்மதுரை’, ‘தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘சுழல்’, ‘கையும் களவும்’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது,‘டோரதி’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Jeeva Subramaniam has stated that the movie Dorothy has brought her the recognition she had been hoping for.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.