பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிக்க இலவச டிக்கெட்: எங்கே கிடைக்கும்?

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிப்பதற்கான இலவச டோக்கன் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது.
பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிக்க இலவச டிக்கெட்: எங்கே கிடைக்கும்?
Published on
Updated on
1 min read

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிப்பதற்கான இலவச டோக்கன் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், இலவச பேருந்து பயண டோக்கன்கள் (அரையாண்டுக்கு ஒரு முறை) வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது, 2023 ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இன்று தொடங்கியுள்ளது.

எங்கு வழங்கப்படுகிறது?

இன்று(டிச. 21) முதல் ஜன.31-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிவரை மூத்த குடிமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள சென்னை மாநகரப் பேருந்து பணிமனைகளில் வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும்?

இலவச பயண டோக்கன்கள் பெற, புதுப்பிக்க வருபவா்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போா்ட் அளவுப் புகைப்படம் கொண்டு வரவேண்டும்.

முதல்முறை விண்ணப்பிக்க வருவோர் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்?

முதல்முறையாக இலவச பயண டோக்கம் பெற விரும்புவோர், இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளா் அடையாள அட்டையின் நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களைச் சரிபாா்க்க ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com