நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

News image
எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

DIN


எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவுநாள் இன்று (டிச.24)  அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்துள்ளதால், பழனிசாமி அணியினர் தனியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.