ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கும்மிடிப்பூண்டியில் எம்ஜிஆரின் நினைவு நாள்

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாள் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதியில் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

DIN

கும்மிடிப்பூண்டி: மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாள் கும்மிடிப்பூண்டியின் பல்வேறு பகுதியில் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அதிமுக மாவட்ட நிர்வாகி முல்லைவேந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால் நாயுடு, பெரியஓபுளாபுரம் ஏழுமலை உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்று எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Story image

கும்மிடிப்பூண்டி பஜாரில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆரின் 35-வது நினைவு நாள் நிகழ்விற்கு நகர அதிமுக செயலாளர் எஸ்.டி.டி.ரவி தலைமை தாங்கினார். நிகழ்விற்கு அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ், அதிமுக நிர்வாகிகள் எம்.ஏ.மோகன், எம்.எஸ்.எஸ்.வேலு, மனோகரன், சிராஜுதீன், கென்னடி அப்பு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன் அமைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவரை கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை  ஊராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக பாசறை மாவட்டச் செயலாளர் டி.சி. மகேந்திரன் தலைமையில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

புதுகும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை துணைத் தலைவர் எல்.சுகுமாரன் ஏற்பாட்டில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பெரியபுலியூரில் மாவட்ட துணைச் செயலாளர் சியாமளா தன்ராஜ் ஏற்பாட்டிலும், பூவலம்பேட்டில் கருணாகரன் ஏற்பாட்டிலும் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.