மதவெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது: ஆர்.நல்லகண்ணு

மத வெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
மதவெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது: ஆர்.நல்லகண்ணு
Published on
Updated on
1 min read

மத வெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு இன்று 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேரில் வாழ்த்தினார். அவரோடு அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்த முதல்வர் அவரை வாழ்த்தி மேடையில் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, "ஆர்.நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் சார்பில் தகை சால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கியதால் தான் விருதுக்கே பெருமை. நானும் வாழ்த்தி வணங்க கடமைப்பட்டுள்ளேன்.
 
பாஜக ஆட்சிக்கு எதிராக நாம் எடுத்து வரும் முயற்ச்சிக்கு நல்லகண்ணு உறுதுணையாக இருக்கிறார்" என பேசினார்.

நல்லகண்ணு மேடையில் பேசியதாவது, "முதல்வருக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோருக்கு என் நன்றிகள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க நாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பரிபூரண சுதந்திரம் என்பது குறித்து முதலில் பேசிய பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேரும். சுதந்திரம் பெற்ற இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இருக்க வேண்டும். போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை மத்திய அரசு மதத்தை வைத்து சீரழிக்க முயற்சிக்கிறார்கள், அதை எதிர்த்து ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டும். மத வெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது". 

ஆர்.நல்லகண்ணுவை பற்றிய தகவல்கள் :

இவர் 1925 ஆம் ஆண்டு இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர், பள்ளிக் காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் இளம் வயதிலேயே சேர்ந்த நல்லக்கண்ணு இந்திய விடுதலை போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1943 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் ஆர்.நல்லகண்ணு சேர்ந்தார். அன்று தொடங்கிய ஒடுக்கப்பட்ட, ஏழை, தொழிலாளர், உழைக்கும் வர்க்க, விளிம்பு நிலை மக்களுக்கான நல்லகண்ணுவின் போராட்டம் அவரது 98 வயதிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு  தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு நல்லகண்ணுவுக்கு அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com