கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தமிழக அரசு தீவிரம்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 மாதங்களுக்கு தேவையான கரோனா பரிசோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  அவசரகால பயன்பாட்டிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கரோனா வார்டிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், N95 முகக்கவசம், பிபிஇ கிட், மருந்துகள் கையிருப்பை உறுதி செய்யவும் சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனாவை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்த ஆய்வை டிச.31-க்குள் மீண்டும் நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேவைக்கேற்ப திரவநிலை ஆக்ஸிஜன் தயார் நிலையில் உள்ளதா என்பதையும் அதிகரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆக்ஸிஜனை பிரித்து அளிக்கக்கூடிய கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேஸில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்த பிஎஃப் - 7 வகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com