சுனாமி நினைவு நாள்: தூத்துக்குடி, நாகை, கடலூரில் மீனவர்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி!

இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி, நாகை, கடலூர் பகுதிகளில் மீனவர்கள் கடற்கையில் கடலில் பால் ஊற்றியும், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி, நாகை, கடலூர் பகுதிகளில் மீனவர்கள் கடற்கையில் கடலில் பால் ஊற்றியும், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

நாகை மாவட்டத்தில் 18-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் திங்கள்கிழமை (டிச.26) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாகை, வேளாங்கண்ணி உள்பட சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

நாகை மாவட்டத்தில் சுனாமி சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் நினைவாக நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சுனாமி நினைவுப் பூங்கா, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டையில் சுனாமி நினைவு மண்டபங்கள், வேளாங்கண்ணியில் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நினைவிடங்களில், மாவட்ட நிா்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் 18-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், மாவட்ட ஆட்சியா் மலரஞ்சலி செலுத்தினார். 

இதைத்தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் மீனவக் கிராமங்கள், தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும், அமைதி ஊா்வலம் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன.

வேளாங்கண்ணியில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. வர்த்தகர் சங்கம் மற்றும் பேராலயம் சார்பாக பேரணியும் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com