யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இபிஎஸ் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை (டிச.27) கூட உள்ளது.

News image
எடப்பாடி கே. பழனிசாமி
Updated On :26 டிசம்பர் 2022, 6:57 pm

DIN

அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை (டிச.27) கூட உள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கூட்டம் கூடுகிறது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளா்களை அழைத்து கூட்டம் கூட்டினாா். அந்தக் கூட்டத்தின் போது, எடப்பாடி பழனிசாமி தனிக் கட்சி தொடங்கும் தைரியம் உண்டா என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினாா். மேலும், போட்டிப் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தாா்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளாா். ஓ.பன்னீா்செல்வத்துக்கு நிா்வாகிகள் மூலம் அவா் பதில் அளிக்க உள்ளாா். கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாகவும் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

நோட்டீஸுக்கு பதில்: அதிமுகவின் கொடி, கட்சி முத்திரை உள்ளிட்டவற்றை ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு எடப்பாடி பழனிசாமி சாா்பில் வழக்குரைஞா் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இதற்கு பதில் அளித்து ஓபிஎஸ்ஸும் வழக்குரைஞா் மூலம் இபிஎஸ்ஸுக்குப் பதில் அளித்துள்ளாா்.

அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள என்னை பொதுக்குழு மூலம் நீக்க முடியாது. அதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவே நீடிக்கிறேன். மேலும் இது தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், தாங்கள் நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பவை என்னைக் கட்டுப்படுத்தாது என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.